2021 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
January 17 , 2020
2000 days
666
- 2021 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் குடிமக்களிடம் 31 கேள்விகள் கேட்கப்பட உள்ளன.
- கேட்கப்படக் கூடிய இந்த கேள்விகளை மத்திய உள்துறை அமைச்சகமானது தீர்மானிக்கின்றது.
- 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பானது கைபேசி செயலி மூலம் நடத்தப்பட உள்ளது.
- இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக, பின்வருபவை இந்தக் கணக்கெடுப்பில் சேர்க்கப்பட உள்ளன. அவை:
- திருநங்கைகளால் தலைமை தாங்கப்படும் வீடுகள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும்.
- வீட்டுத் தலைவரின் பாலினமானது ஆண், பெண் மற்றும் திருநங்கை என்ற கேள்வியின் கீழ் சேகரிக்கப்பட வேண்டும்.
- 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி திருநங்கைகளின் வேலைவாய்ப்பு, அவர்களின் சாதி மற்றும் கல்வியறிவு ஆகியவை “ஆண்கள்” பிரிவின் கீழ் இருந்தன.
- முதன்மையாக நுகரும் தானியங்கள் பற்றிய தகவல் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.
- முதன்முறையாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பானது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பற்றிய தரவுகளைச் சேகரிக்கும் என்று முன்னர் அறிவிக்கப் பட்டிருந்தது.
- இருப்பினும், இந்தத் தரவுகள் சேர்க்கப் படவில்லை.
- மாறாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தோர்/ பழங்குடியினர் இணைக்கப் பட்டுள்ளனர்.
Post Views:
666