ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பானது “2021 உற்பத்தி இடையீட்டு அறிக்கை” என்ற தனது அறிக்கையினை சமீபத்தில் வெளியிட்டது.
புதைபடிவ எரிபொருட்களை உற்பத்தி செய்வதற்கான அரசின் திட்டமானது பாரீஸ் ஒப்பந்த வரம்புகளின் இலக்குகளிலிருந்து விலகும் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
இந்த அறிக்கையானது “அரசு திட்டமிட்ட நிலக்கரி, வாயு மற்றும் எண்ணெய் உற்பத்தி” மற்றும் “பாரீஸ் ஒப்பந்த வரம்புகளின் இலக்குகளுடன் பொருந்தாத உலகளாவிய உற்பத்தி நிலைகள்” ஆகியவற்றிற்கு இடையேயான இடைவெளியை மதிப்பிடுகிறது.
2030 ஆம் ஆண்டில் புவி வெப்பமடைதலை 1.5°C என்ற அளவில் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான புதைபடிவ எரிபொருட்களின் அளவை விட இரண்டு மடங்கிற்கும் மேலாக உற்பத்தி செய்வதற்கு அரசுகள் திட்டமிடுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.
உலகில் உற்பத்தி இடைவெளியானது மாறாமல் உள்ளதை இது குறிப்பிடுகிறது.