2021ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முழுமையான தகவல்
August 5 , 2019 2109 days 933 0
வீடுகளைக் கணக்கெடுக்கும் முறையின் ஒரு பகுதியாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2021 ஆனது வீடுகளில் உள்ள கைபேசிகள், DTH/கேபிள் டிவி இணைப்பு, இணைய வசதி, வங்கிக் கணக்குகளைக் கொண்டுள்ள குடும்ப உறுப்பினர்கள், வாடகைக்கு குடியிருக்கும் வீட்டைத் தவிர்த்து சொந்தமாக உள்ள மற்ற வீடுகள், புட்டியில் அடைக்கப்பட்ட நீர் கிடைக்கும் தன்மை, கைபேசி எண் ஆகியவற்றைப் பற்றி முதல்முறையாக கேட்க இருக்கின்றது.
2021 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் வீடுகளைப் பட்டியலிடும் வினாப் பட்டியல் ஒரு வீட்டில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் பற்றிய எண்ணிக்கையைக் கொண்டிருக்காது.
முக்கியமாக இது சாதி பற்றிய தகவலைச் சேகரிக்காது. மாறாக இது மூன்றாம் பாலினத்திற்கான ஒரு பட்டியலைக் கொண்டிருக்கும்.
இன்னொரு புதிய உள்ளடக்கமானது சமீபத்திய விளக்கத்தின் படியான புதிய மாற்றுத்திறன்களின் வகைகளை முக்கியமாகக் கணக்கில் கொண்டதாகும்.
சுதந்திர இந்தியாவில் 1951ம் ஆண்டு முதல் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் முதல்முறையாக 2021ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்படும் தகவல்கள் மின்னணு ரீதியில் சேமிக்கப்படவுள்ளன.