2022 ஆம் ஆண்டின் பாடத் திட்டத்தின் படியான QS உலகப் பல்கலைக்கழக தர வரிசை
April 10 , 2022 1216 days 526 0
ஐக்கியப் பேரரசின் QS (குவாக்கரேலி சைமண்ட்ஸ்) நிறுவனமானது 12வது பாடத் திட்டத்தின் படியான QS உலகப் பல்கலைக்கழக தரவரிசை 2022 என்ற தரவரிசையை வெளியிட்டது.
உலகெங்கிலும் உள்ள கல்வி நிறுவனங்களின் பாடம் வாரியான தரவரிசையானது பல பட்டியல்களின் தொகுப்பாகும்.
ஒரு குறிப்பிட்ட பாடத்தில் முன்னணியில் உள்ள பல்கலைக்கழகங்களை எதிர்கால மாணவர்கள் அடையாளம் காண உதவுவதற்காக, பாடத்திட்டத்தின் அடிப்படையில் QS உலகப் பல்கலைக்கழக தரவரிசை ஆண்டுதோறும் வெளியிடப் படுகிறது.
பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் கீழ் முதல் 100 இடங்களில் இடம் பெற்று உள்ள இந்திய நிறுவனங்கள் மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (65வது இடத்தையும்), டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (72வது இடத்தையும்) ஆகியனவாகும்.
2022 ஆம் ஆண்டு QS உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் முதல் 3 இடத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள்
மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்,
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்,
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் & கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்.