2022 ஆம் ஆண்டில் அதிகளவில் பிடிக்கப்பட்ட நீர்வாழ் உயிரினங்கள்
June 12 , 2024 346 days 370 0
கட்லா (லாபியோ கட்லா) 2022 ஆம் ஆண்டில் மனிதர்களால் அதிகளவில் பிடிக்கப்பட்ட முதல் 10 வகையான நீர்வாழ் விலங்குகளில் ஒன்றாகும்.
2022 ஆம் ஆண்டில் 4 மில்லியன் டன்களுக்கு மேல் வளர்க்கப்பட்ட கட்லா, 'முதல் 10 வகையிலான இனங்கள் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது.
இந்த இனம் ஆனது, “வட இந்தியா, சிந்து சமவெளி மற்றும் பாகிஸ்தான், வங்காள தேசம், நேபாளம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளின் அருகிலுள்ள மலைகளில் உள்ள நதி அமைப்புகளில் காணப்படுகிறது.
கட்லா மற்றும் இரண்டு முக்கியமான இந்திய கெண்டை மீன்கள் - ரோஹு (லேபியோ ரோஹிதா), மற்றும் மிருகல் (சிர்ரினஸ் மிரிகலா) - இந்தியாவின் உள்நாட்டு மீன் உற்பத்தியில் அதிகம் வளர்க்கப்படும் மூன்று மீன் வகைகள் ஆகும்.
6.8 மில்லியன் டன்களுடன், வெள்ளை இறால் (பெனாயியஸ் வண்ணமேய்) 2022 ஆம் ஆண்டில் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்ட நீர்வாழ் விலங்கு இனமாகும்.