2022 ஆம் ஆண்டில் MSME நிறுவனத் தயாரிப்புகளை அதிகம் வாங்கிய பிரிவுகள்
February 6 , 2023 1234 days 647 0
2022 ஆம் ஆண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன விற்பனையாளர்களிடமிருந்து சரக்குகள் மற்றும் சேவைகளை வாங்குவதில் பாதுகாப்பு அமைச்சகம் முன்னணியில் உள்ளது.
அரசு இணையவழிச் சந்தையானது 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இது இயங்கலையில் சரக்குகள் மற்றும் சேவைகளை வாங்குவதற்குப் பயன்படுத்தப் படும் ஒரு இயங்குகலை தளமாகும்.
இந்த அமைச்சகமானது, 2022 ஆம் ஆண்டில் 16,747 கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் மற்றும் சேவைகளை இத்தளத்தில் இருந்து வாங்கியுள்ளது.
இது முந்தைய ஆண்டில் பதிவானதை விட 250 சதவீதம் அதிகமாகும்.