TNPSC Thervupettagam

2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் பருவநிலை பற்றிய அறிக்கை

January 15 , 2023 947 days 432 0
  • 2022 ஆம் ஆண்டில், இந்தியாவில் வருடாந்திர சராசரி நில மேற்பரப்பு காற்றின் வெப்ப நிலை நீண்ட காலச் சராசரியை (1981-2010 காலம்) விட 0.510 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.
  • இது 1901 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் கணக்கெடுப்பு தொடங்கியதிலிருந்து பதிவாகியுள்ள ஐந்தாவது வெப்பமான ஆண்டாகப் பதிவாகியுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் பதிவான உலகளாவியச் சராசரி வெப்பநிலையானது, தற்போது தொழில்துறை காலத்திற்கு முந்தைய அளவின் (1850-1900) சராசரியை விட 1.15 ± 0.13 °C அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் பதிவான மழைப் பொழிவானது 1971-2020 ஆம் கால கட்டத்தின் அடிப்படையில், அதன் நீண்ட காலச் சராசரி மதிப்பில் 108% ஆகும்.
  • குளிர்காலத்தில் பதிவான மழைப்பொழிவானது, அதன் நீண்ட காலச் சராசரியில் 147% ஆகும்.
  • பருவமழைக்கு முந்தைய மழைப்பொழிவானது அதன் நீண்ட காலச் சராசரியில் 99% ஆகும்.
  • தென்மேற்கு பருவமழை காலத்தில் பதிவான மழைப்பொழிவானது, அதன் நீண்ட காலச் சராசரியில் 106 % ஆகும்.
  • பருவமழைக்குப் பிந்தையப் பருவத்தில் பதிவான மழைப்பொழிவானது அதன் நீண்ட காலச் சராசரியில் 119% ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்