2022 ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பின் வெற்றியாளர்கள்
February 6 , 2022
1227 days
496
- உத்தரப் பிரதேச மாநிலத்தின் காட்சிப் பீடமானது 2022 ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பின் சிறந்த காட்சிப் பீடமாக அறிவிக்கப்பட்டது.
- மகாராஷ்டிரா மாநிலத்தின் காட்சிப் பீடமானது பிரபல தேர்வுப் பிரிவில் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
- மத்தியத் தொழிற்சாலைப் பாதுகாப்புப் படையானது மத்திய ஆயுதப் படைகளிலேயே சிறந்த அணிவகுப்புக் குழுவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
- இந்தியக் கடற்படையானது, மற்ற படைகளில் சிறந்த அணிவகுப்புப் படைப் பிரிவாக பிரபலத் தேர்வுப் பிரிவில் வெற்றி பெற்றது.
- அமைச்சகங்களின் காட்சிப் பீடங்களுள் கல்வி அமைச்சகம் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஆகியவற்றின் காட்சிப் பீடங்கள் சிறந்தவையாக அறிவிக்கப் பட்டன.
- கல்வி அமைச்சகத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான காட்சிப் பீடத்திற்கு “Vedas to Metaverse” என்று தலைப்பிடப்பட்டது.

Post Views:
496