2023 ஆம் ஆண்டிற்கான இந்திய அரசின் அதிகாரப்பூர்வ நாட்காட்டி
January 3 , 2023 958 days 431 0
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் 2023 ஆம் ஆண்டிற்கான இந்திய அரசின் அதிகாரப் பூர்வ நாட்காட்டியினை வெளியிட்டார்.
பொது மக்களின் நலனை உறுதி செய்வதற்காக இந்திய அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு முயற்சிகளை வெளிப்படுத்தும் விதமாக 12 மாதங்களுக்கு 12 கருத்துருக்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
ஒட்டு மொத்தமாக, இந்த நாட்காட்டி சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் பற்றிய இந்திய அரசின் குறிக்கோளினைப் பிரதிபலிக்கிறது.
இது ‘நயா வர்ஷ், நயே சங்கல்ப்’ என்ற கருத்துருவின் அடிப்படையில் உருவாக்கப் பட்டது.
இந்த நாட்காட்டி ஆனது ஆங்கிலம் மற்றும் இந்தி உட்பட 13 மொழிகளில் கிடைக்கப் பெறுகிறது.