TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டிற்குள் கருங்காய்ச்சலை ஒழிப்பதற்கு இலக்கு நிர்ணயம்

August 8 , 2022 1075 days 680 0
  • 2023 ஆம் ஆண்டிற்குள் கருங்காய்ச்சலை நம்நாட்டிலிருந்து அகற்ற இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • கருங்காய்ச்சல் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட 633 உள்ளூர் தொகுதிகளுள், 625 தொகுதிகள் 2021 ஆம் ஆண்டில் கருங்காய்ச்சலை வெற்றிகரமாக ஒழித்துள்ளன.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் இந்த நோயை ஒழிக்க வேண்டும் என்ற உலக சுகாதார அமைப்பின் இலக்கை விட இந்தியாவின் இலக்கு சற்று முன்னேறிய நிலையில் உள்ளது.
  • கருங்காய்ச்சல் ஆனது லீஷ்மேனியாசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
  • இந்தியா உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள இந்த நோய் ஒரு புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோயாகும்.
  • லீஷ்மேனியா என்ற ஒட்டுண்ணியால் இந்நோய் ஏற்படுகிறது.
  • இந்த ஒட்டுண்ணியானது மணல் ஈக்கள் என்ற பூச்சிகள் கடிப்பதால் பரவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்