2023 ஆம் ஆண்டு இக்பால் மசிஹ் விருது - லலிதா நடராஜன்
June 25 , 2023 789 days 474 0
அமெரிக்க அரசின் தொழிலாளர் துறையானது, வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் லலிதா நடராஜனுக்கு குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புக்கான 2023 ஆம் ஆண்டு இக்பால் மசிஹ் விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.
தென்னிந்தியாவில் நிலவும் குழந்தைத் தொழிலாளர் முறைகளை ஒழிப்பதற்கு லலிதா தொடர்ந்து போராடி வருகிறார்.
ஆள்கடத்தல் முறை, குறிப்பாக கொத்தடிமைத் தொழிலாளர் முறைகளால் பாதிக்கப் பட்ட குழந்தைகளை அவர் அடையாளம் கண்டு, அவர்களைச் சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்க உதவி வருகிறார்.
இக்பால் மசிஹ் விருது என்பது அமெரிக்கக் காங்கிரஸால் அறிவிக்கப்பட்ட, 2008 ஆம் ஆண்டில் தொழிலாளர் துறை செயலரால் நிறுவப்பட்ட பணப்பரிசு சாராத ஒரு விருது ஆகும்.
குழந்தைத் தொழிலாளர் முறைகளை எதிர்த்துப் போராடும் பல்வேறு மகத்தானப் பங்களிப்புகளை இது கௌரவப்படுத்துகிறது.