2023 ஆம் ஆண்டு உலக வர்த்தக அறிக்கை: மறு உலகமயமாக்கல்
October 17 , 2023 746 days 449 0
உலக வர்த்தக அமைப்பினால் வெளியிடப்பட்ட 2023 ஆம் ஆண்டிற்கான உலக வர்த்தக அறிக்கையானது, மிகவும் பாதுகாப்பான, உள்ளார்ந்த மற்றும் நிலையான உலகினை உருவாக்குவதில் சர்வதேச வர்த்தகத்தின் பங்கினை குறித்து ஆராய்கிறது.
இந்த அறிக்கையானது "மறு-உலகமயமாக்கலுக்கு" பரிந்துரைப்பதோடு, பல்வேறு நாடுகள், மக்கள் மற்றும் சிக்கல்களுடனான வர்த்தக ஒருங்கிணைப்பையும் விரிவு படுத்துகிறது.
அணுமான அடிப்படையிலான புவிசார் அரசியல் கூட்டணிகளிலுள்ள வர்த்தகப் போட்டிகளானது அவற்றுக்கிடையே உள்ளதை விட மிக வேகமாக வளர்ந்து வருகின்றன.
இது வர்த்தக நடவடிக்கையினை போட்டி நாடுகளிலிருந்து நட்பு நாடுகளை (Friend-shoring) நோக்கி நகர்த்தப் படுவதைக் குறிக்கிறது.
மறு-உலகமயமாக்கல் என்பது உலகமயமாக்கலை மேலும் உள்ளார்ந்ததாகவும், பாதுகாப்பானதாகவும், நிலையானதாகவும் மாற்றுவதில் கவனம் செலுத்தும் நோக்கில் சர்வதேச வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பினை விரிவு படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் வழி வகுக்கும் கருத்தாக்கமாகும்.
இது நாடுகளுக்கு இடையேயான அதிக ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒருங்கிணைப்பின் மூலம் புவிசார் அரசியல் குழப்பங்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற சமகாலத்திய உலகளாவியச் சவால்களை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.