2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான நிதி உறுதித் தன்மை அறிக்கை
July 5 , 2023 1023 days 605 0
பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் மொத்த வாராக் கடன்கள் ஆனது, 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 3.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இது 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சுமார் 3.6 சதவீதமாகக் குறையும் என எதிர் பார்க்கப் படுகிறது.
ஆனால் சில்லறைக் கடன் வாங்குபவர்களில் கிட்டத்தட்ட 10 சதவீதம் பேர் மாதாந்திரக் கொடுப்பனவுகளை அந்த தேதிக்குள் செலுத்துவதில்லை.
2022-23 ஆம் ஆண்டில் தனியார் துறை வங்கிகள் அதிக அளவில் கடன்களைத் தள்ளுபடி செய்ததால், மொத்த வாராக் கடன் விகிதத்தில் தள்ளுபடி செய்யப்பட்டக் கடன்கள் அதிகரித்தன.
இது 2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து குறைந்து வந்தது.