2023 ஆம் ஆண்டு REACH மாற்றத்தினை ஏற்படுத்தும் புதுமையாளர் விருது
December 16 , 2023 517 days 325 0
ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் அதுல் ஷா அவர்களுக்கு, தொழு நோய் சிகிச்சைக்கான அவரது அற்புதமான பங்களிப்பிற்காக 2023 ஆம் ஆண்டு REACH மாற்றத்தினை ஏற்படுத்தும் புதுமையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இவர் தொழுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் குறைபாடுகளை தீர்ப்பதற்காக சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தாமல் மிகவும் எளிய அறுவை சிகிச்சையைப் பயன்படுத்தினார்.
தொழுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குப் பொதுவாக ஏற்படும் பாத புண்களைப் பராமரிப்பதில் நோயாளிகளுக்கு உதவும் வகையில் ‘சுய-பராமரிப்புத் தொகுப்பு’ ஒன்றையும் அவர் வடிவமைத்தார்.
இந்தப் புதுமையான தீர்வு இந்தியாவின் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தில் (2007 ஆம் ஆண்டு முதல்) ஒருங்கிணைக்கப்பட்டு இந்தியா முழுவதும் சுமார் 80,000 பேர் பயனடைந்துள்ளனர்.