2023-24 ஆம் ஆண்டிற்கான முதல் துணை நிதி ஒதுக்கீடுகள்
October 13 , 2023 660 days 407 0
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், 2023-24 ஆம் ஆண்டிற்கான 2,893.15 கோடி மதிப்பிலான தமிழக அரசின் முதல் துணை நிதி ஒதுக்கீடுகளைச் சமர்ப்பித்தார்.
இதில் சென்னை மாநகராட்சிக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 304 கோடி ரூபாயை அரசு வழங்கியுள்ளது.
இது சென்னை மற்றும் அதன் புறநகரப் பகுதிகளிலும் கடலூர் மாநகராட்சியிலும் மழைநீர் வடிகால் அமைப்பதற்குப் பயன்படுத்தப்படும்.
தமிழ்நாடு கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மற்றும் திருச்சி பால் ஒன்றியம் ஆகியவற்றிற்கான மூலதனப் பங்கீட்டு உதவியாக 175.33 கோடி ரூபாயை அனுமதித்துள்ளது.
இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட 1,87,275 விவசாயிகளுக்கு உள்ளீட்டு கருவிகளுக்கான மானிய நிவாரண உதவி வழங்க 181.40 கோடி ரூபாய் வழங்கப் பட்டு உள்ளது.
தென்காசி, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் 25 தொகுதிகள் இதில் அடங்கும்.