TNPSC Thervupettagam

2023-24 ஆம் ஆண்டில் பெண்களின் வேலைவாய்ப்பு விகிதம்

August 29 , 2025 26 days 71 0
  • 2017-18 ஆம் ஆண்டில் 22% ஆக இருந்த பெண்களின் வேலைவாய்ப்பு விகிதம் ஆனது 2023-24 ஆம் ஆண்டில் 40.3% ஆக சுமார் இரு மடங்காக உயர்ந்துள்ளதாக, வருடாந்திர தொழிலாளர் வளக் கணக்கெடுப்பு (PLFS) தரவுகள் தெரிவிக்கின்றன.
  • 2017-18 ஆம் ஆண்டில் 5.6% ஆக இருந்த பெண்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 2023-24 ஆம் ஆண்டில் 3.2% ஆகக் குறைந்துள்ளது.
  • கிராமப்புற பெண்களின் வேலைவாய்ப்பு 96% அதிகரித்துள்ளது அதே நேரத்தில் நகர்ப்புற பெண்களின் வேலைவாய்ப்பு 43% அதிகரித்துள்ளது.
  • ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) ஊதியத் தரவுகளின்படி, கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 1.56 கோடிக்கும் அதிகமான பெண்கள் முறையான பணியாளர் வளத்தில் சேர்ந்துள்ளனர்.
  • கடந்தப் பத்தாண்டுகளில் பாலினம் சார்ந்த நிதி ஒதுக்கீடுகள் 429% அதிகரித்து, பெண்களின் தொழில்முனைவினை ஆதரித்தன.
  • எழுபது மத்திய அரசுத் திட்டங்களும், 400க்கும் மேற்பட்ட மாநில அளவிலான திட்டங்களும் பெண் தொழில்முனைவினை ஊக்குவிக்கின்றன.
  • தொழில் துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையில் (DPIIT) பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்களில் கிட்டத்தட்டப் பாதி எண்ணிக்கையிலான நிறுவனங்கள் குறைந்தது ஒரு பெண் இயக்குநரைக் கொண்டுள்ளன.
  • பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மொத்தக் கடன்களில் 68% பெண்கள் பெற்றனர்.
  • பிரதான் மந்திரி தெருவோர விற்பனையாளர்களுக்கான ஆத்மநிர்பர் நிதி (PM SWANidhi) திட்டத்தின் கீழான பயனாளிகளில் நாற்பத்து நான்கு சதவீதம் பெண்கள் ஆவர்.
  • 2010-11 ஆம் ஆண்டில் 1 கோடியாக இருந்த பெண்கள் தலைமையிலான MSME நிறுவனங்கள் 2023-24 ஆம் ஆண்டில் 1.92 கோடியாக கிட்டத்தட்ட இரட்டிப்பாகின.
  • 2010-11 ஆம் ஆண்டில் 17.4% ஆக இருந்த பெண்களுக்குச் சொந்தமான தனியுரிம நிறுவனங்கள் 2023-24 ஆம் ஆண்டில் 26.2% ஆக அதிகரித்துள்ளன.
  • பெண்கள் தலைமையிலான MSME நிறுவனங்கள் 2021 மற்றும் 2023 ஆம் நிதி ஆண்டுகளுக்கு இடையில் பெண்களுக்காக 89 லட்சத்திற்கும் அதிகமான கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கின.
  • 2013 ஆம் ஆண்டில் 42% ஆக இருந்த பெண் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு 2024 ஆம் ஆண்டில் 47.53% ஆக உயர்ந்தது.
  • 2017-18 ஆம் ஆண்டில் 34.5% ஆக இருந்த முதுகலை கல்வி பெற்ற பெண்களின் வேலை வாய்ப்பு விகிதம் 2023-24 ஆம் ஆண்டில் 40% ஆக அதிகரித்துள்ளது.
  • 2025 ஆம் ஆண்டு இந்தியத் திறன்கள் அறிக்கையானது, இந்தியப் பட்டதாரிகளில் 55% பேர் உலகளவில் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று கணித்துள்ளது.
  • 16.69 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா பெண் தொழிலாளர்கள் e-Shram தளத்தில்  பதிவு செய்து, அரசாங்க சமூக நலத் திட்டங்களை அணுகுகின்றனர்.
  • 2047 ஆம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான முக்கிய இலக்கான 70% பெண் தொழிலாளர் வளப் பங்களிப்பை அடைவதற்கு நாரி சக்தி ஒரு மையமாக உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்