2023 ஆம் ஆண்டின் சிறந்த வனவிலங்குப் புகைப்படக் கலைஞர்
November 5 , 2023 637 days 593 0
இந்தியாவைச் சேர்ந்த 6 புகைப்படக் கலைஞர்கள் வனவிலங்குப் புகைப்பட விருதுகளை வென்றுள்ளனர்.
ஸ்ரீராம் முரளி, தமிழ்நாட்டின் ஆனைமலை புலிகள் வளங்காப்பகப் பகுதியில் எடுத்த புகைப்படத்திற்காக ‘நடத்தை: முதுகெலும்பில்லா உயிரினங்கள்’ பிரிவில் ஆண்டின் சிறந்த வனவிலங்குப் புகைப்படக் கலைஞர் விருதைப் பெற்றுள்ளார்.
விஷ்ணு கோபால் விலங்கு உருவப்படம் என்ற பிரிவில் விருதினை வென்றார்.
அசாமின் ஒராங் தேசிய பூங்காவின் விளிம்புப் பகுதிகளில் வாழும் மக்கள் மத்தியில் உலாவும் ஒரு துன்பப்பட்ட நிலையில் உள்ள புலியின் புகைப்படத்தினை எடுத்த நெஜிப் அகமது மற்ற வெற்றியாளர்கள் ஆவர்..
எரியும் குப்பைகளின் தீப்பிழம்புகளால் சூழப்பட்ட ராம்சர் தளமான பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் புகைப்படத்திற்காக ராஜ் மோகன் பரிசு பெற்றார்.
பெங்களூரைச் சேர்ந்த 10 வயதான விஹான் தல்யா விகாஸ் தனது பிரிவில் முதல் பரிசை வென்றார்.
இந்தப் பரிசானது பெரும்பாலும் 'புகைப்படக் கலையின் ஆஸ்கார்' என்று குறிப்பிடப் படுகிறது.
இது உலகின் மிகவும் சிறப்பான வனவிலங்குப் புகைப்படங்களைக் காட்சிப் படுத்தச் செய்வதற்கான உலகளாவிய தளமாக செயல்படுகிறது.