2023 ஆம் ஆண்டில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு
July 13 , 2022 1037 days 5573 0
2023 ஆம் ஆண்டில் இரு நாடுகளிலும் இந்த ஆண்டு 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை பதிவாகியுள்ள நிலையில் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா சீனாவை விஞ்சும்.
உலக மக்கள் தொகையானது, இந்த ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதிக்குள் 8 பில்லியனை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது 2030 ஆம் ஆண்டில் 8.5 பில்லியனாகவும், 2100 ஆம் ஆண்டில் 10.4 பில்லியனாகவும் உயரலாம்.
உலக மக்கள் தொகையானது 1950 ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகவும் குறைவான வேகத்தில் அதிகரித்து வந்தது.
இது 2020 ஆம் ஆண்டில் 1 சதவீதத்திற்கும் கீழே சரிந்தது.
2021 ஆம் ஆண்டில், உலக மக்கள்தொகையின் சராசரி கருவுறுதல் வீதமானது ஒரு பெண்ணுக்கு அவரது வாழ்நாள் முழுவதும் 2.3 குழந்தைப் பிறப்புகளாக இருந்தது.
இது 1950 ஆம் ஆண்டில் சுமார் 5 என்ற குழந்தைப் பிறப்புகளில் இருந்து வீழ்ச்சி அடைந்தது.
உலகளாவிய கருவுறுதல் வீதமானது 2050 ஆம் ஆண்டில் ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தை பிறப்புகளாக மேலும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.