2023 ஆம் ஆண்டில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்
November 28 , 2023 670 days 553 0
நவம்பர் 18 ஆம் தேதியன்று நடைபெற்ற தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டத் தொடரில், ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப் பட்டன.
இந்த மசோதாக்களில் பெரும்பாலானவை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுநர் அலுவலகத்தில் நிலுவையில் இருந்தன.
மாநிலப் பல்கலைக் கழகங்களின் வேந்தராக ஆளுநருக்குப் பதிலாக முதல்வர் நியமிக்கப் படுவது தொடர்பான விதிமுறைகளும் இதில் அடங்கும்.
ஆளுநரின் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான அதிகாரத்தை மட்டுமே எடுத்து மாநில அரசுக்கு வழங்குவதற்கு இந்த மசோதாக்கள் முயல்கின்றன.
இது தொடர்பாக, "ஆளுநர்" என்ற சொல் "அரசு" என்ற சொல்லால் மாற்றப்படுகிறது.
ஒரு புதிய பிரிவின் மூலம், துணை வேந்தர்களை நீக்குவதற்கான நடைமுறையை வகுப்பதோடு, அரசாங்கத்தின் உத்தரவின் மூலம் மட்டுமே துணை வேந்தர்களை நீக்க முடியும் என்று இந்த மசோதாக்கள் கூறுகின்றன.
மேலும், இதே வகையில் வரைவு செய்யப்பட்டுள்ள சென்னைப் பல்கலைக்கழகம் தொடர்பான மசோதா ஒன்றும் இதில் உள்ளது.
எனினும், ஆளுநருக்குப் பதிலாக முதலமைச்சரை வேந்தராக நியமிக்க சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதாவில் கோரப் பட்டுள்ளது.
இந்த மசோதாக்கள், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளன.
தற்போது, இசை மற்றும் நுண்கலைப் பல்கலைக்கழகத்திற்கு மட்டுமே முதல்வர் வேந்தராக உள்ளார்.
இது 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டது.