2023 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 7 அம்சங்களுக்கு முன்னுரிமை
February 3 , 2023 1048 days 546 0
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 2023 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள ஏழு முக்கிய முன்னுரிமை அம்சங்களைப் பட்டியலிட்டுள்ளார்.
அவை ஒன்றையொன்றின் தேவையைப் பூர்த்தி செய்து அமிரித் கால் என்ற கால கட்டத்தில் அரசாங்கத்தினை வழி நடத்துகின்ற சப்தரிஷிகளாகச் செயல்பட உள்ளன.
இந்தியா தனது சுதந்திரத்தின் நூற்றாண்டு நிறைவினைக் கொண்டாட உள்ள 2047 ஆம் ஆண்டு வரையிலான 25 ஆண்டு காலத்தைக் குறிக்கும் வகையில் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட சொல் அம்ரித் கால் என்பதாகும்.
இது அடுத்த 25 ஆண்டுகளுக்கான அரசின் ஒரு செயல்திட்டமாகும்.