TNPSC Thervupettagam

2023–24 ஆம் ஆண்டில் இந்தியாவின் எழுத்தறிவு விகிதம்

September 12 , 2025 11 days 72 0
  • கல்வி அமைச்சகத்தின்படி, 2011 ஆம் ஆண்டில் 74 சதவீதமாக இருந்த இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் 2023–24 ஆம் ஆண்டில் 80.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • ULLAS–நவ் பாரத் சாக்சார்த்த காரியக்ரமின் கீழ் 3 கோடிக்கும் மேற்பட்ட கற்பவர்களும் 42 லட்சம் தன்னார்வலர்களும் சேர்ந்துள்ளனர்.
  • 90 சதவீத வெற்றி விகிதத்துடன், சுமார் 1.83 கோடி கற்பவர்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணியல் மதிப்பீடுகளை மேற்கொண்டுள்ளனர்.
  • உள்ளார்ந்த எழுத்தறிவை ஊக்குவிப்பதற்காக இந்தத் திட்டம் 26 இந்திய மொழிகளில் கற்றல் பொருட்களை வழங்குகிறது.
  • 2024 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதியன்று முழு கல்வியறிவு பெற்ற முதல் ஒன்றியப் பிரதேசமாக லடாக் அறிவிக்கப்பட்டது.
  • திரிபுரா, மிசோரம் மற்றும் கோவாவுடன் இணைந்து முழு செயல்பாட்டுக் கல்வியறிவு பெற்ற நான்காவது மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் மாறியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்