TNPSC Thervupettagam

2024–25 ஆம் ஆண்டில் நிகர அந்நிய நேரடி முதலீடு

May 29 , 2025 10 days 69 0
  • 2024-25 ஆம் ஆண்டில் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு (FDI) வரவு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 96% சரிந்தது.
  • 2024-25 ஆம் ஆண்டில் நிகர FDI ஆனது சுமார் 0.4 பில்லியன் டாலராக மிதமான அளவில் இருந்தது என்பதோடு இது ஓராண்டிற்கு முன்பு 10.1 பில்லியன் டாலராக இருந்தது.
  • 2024-25 ஆம் ஆண்டில், இந்தியாவிலிருந்து அயல்நாடுகளில் மேற்கொள்ளப் படும் /வெளியேறும் நிகர FDI (OFDI) ஆனது ஆண்டிற்கு 75% அதிகரித்து சுமார் 29.2 பில்லியன் டாலராக இருந்தது.
  • சிங்கப்பூர், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், மொரிஷியஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து OFDI அதிகரிப்பில் பாதிக்கும் மேற்பட்ட பங்கைக் கொண்து இருந்தன.
  • இதற்கிடையில், 2023 ஆம் நிதியாண்டில் 44.5 பில்லியன் டாலராக இருந்த வெளியேறும் மற்றும் திரும்பப் பெறப்பட்ட முதலீடுகள், 2025 ஆம் நிதியாண்டில் 15.7% அதிகரித்து 51.5 பில்லியன் டாலராக உயர்ந்தது.
  • 2023 மற்றும் 2024 ஆம் நிதியாண்டில் 71 பில்லியன் டாலருக்கும் சற்று அதிகமாக தேக்க நிலையில் இருந்த மொத்த FDI உள்வரவு ஆனது, 2025 ஆம் நிதியாண்டில் சுமார் 13.7% அதிகரித்து 81 பில்லியன் டாலராக உயர்ந்தது.
  • 2022 ஆம் நிதியாண்டில், இந்தியாவிற்கான FDI வரவு 84.83 பில்லியன் டாலராக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்