TNPSC Thervupettagam

2024–25 ஆம் ஆண்டில் பதப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்கு உற்பத்தி

July 19 , 2025 2 days 11 0
  • 2024–25 ஆம் ஆண்டில் பிரஞ்சுப் பொரியல் (French fries) மற்றும் வறுவல்/சிப்ஸுக்குப் பயன்படுத்தப்படும் பதப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்கின் இந்தியாவின் முன்னணி உற்பத்தியாளராக குஜராத் மாறியுள்ளது.
  • பதப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்கு உற்பத்தியில் பனஸ்கந்தா மாவட்டம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குஜராத்தை முன்னிலை வகிக்க உதவுகிறது.
  • இது 2024–25 ஆம் ஆண்டில் 61,000 ஹெக்டேருக்கு மேல் பரப்பளவினைக் கொண்டு 18.70 லட்சம் டன் உருளைக்கிழங்குகளை உற்பத்தி செய்கிறது.
  • இது 2023–24 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட 15.62 லட்சம் டன்களை விட அதிகம் ஆகும்.
  • பனஸ்கந்தாவின் உற்பத்தித் திறன் ஹெக்டேருக்கு 30.65 டன் ஆகும் என்பதோடு இது பிரெஞ்சுப் பொரியல்களுக்குத் தேவையான தரம் கொண்ட உருளைக் கிழங்கிற்கான அதிகத் தேவையைப் பூர்த்தி செய்கிறது.
  • சபர்கந்தாவானது 12.97 லட்சம் டன்கள் மற்றும் ஆரவல்லி 6.99 லட்சம் டன்கள் உருளைக் கிழங்குகளை உற்பத்தி செய்யும் பிற முக்கிய மாவட்டங்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்