TNPSC Thervupettagam

2024–25 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி

May 7 , 2025 11 hrs 0 min 31 0
  • 2024–25 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியானது வரலாற்றுச் சிறப்பு மிக்க வகையில் 824.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
  • இந்த எண்ணிக்கையானது, முந்தைய ஆண்டின் மொத்த ஏற்றுமதியான சுமார் 778.1 பில்லியன் டாலரை விட 6.01 சதவீதம் அதிகரிப்பைக் குறிக்கிறது.
  • சேவைகள் ஏற்றுமதியானது, ஆண்டிற்கு 13.6 சதவீதம் அதிகரித்து, இதுவரை இல்லாத அளவிற்கு 387.5 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.
  • வணிகப் பொருட்களைப் பொறுத்தவரை, 2024–25 ஆம் நிதியாண்டில் இந்தியா 437.4 பில்லியன் டாலருக்கும் அதிகமானப் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.
  • இதில் பெட்ரோலியம் சாராத பிற பொருட்களின் ஏற்றுமதியானது பிற பொருட்களின் ஏற்றுமதியை விட அதிகமாக சுமார் 374.08 பில்லியன் டாலர் என்ற சாதனை அளவினை எட்டியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்