2024 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்தப் பாதுகாப்புத் துறை நிறுவனங்கள்
December 8 , 2025 4 days 38 0
2024 ஆம் ஆண்டில், SIPRI (ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்) ஆனது 100 முன்னணி ஆயுத உற்பத்தி மற்றும் இராணுவ சேவைகள் நிறுவனங்களின் தர வரிசையை வெளியிட்டது.
இந்தியப் பொதுத்துறை நிறுவனங்கள் (PSU) ஆனது இதன் முதல் 100 இடங்களில் இடம் பெற்றன. அவை
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) – 44வது, 4,010 மில்லியன் டாலர்
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) – 58வது, 2,750 மில்லியன் டாலர்
மேசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் (MDL) – 91வது, 1,370 மில்லியன் டாலர்
லாக்ஹீட் மார்ட்டின் (அமெரிக்கா), RTX (அமெரிக்கா), நார்த்ரோப் க்ரம்மன் (அமெரிக்கா) ஆகியவை 3 முன்னணி உலகளாவிய நிறுவனங்கள் ஆகும்.
2024 ஆம் ஆண்டில் 100 முன்னணி நிறுவனங்களின் மொத்த வருவாய் 679 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது.
2023 ஆம் ஆண்டினை விட 8.2% அதிகமாக, இந்தியாவின் மொத்த ஆயுத வருவாய் 2024 ஆம் ஆண்டில் 7.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது என்பதோடுஇது உலகளாவிய ஆயுத வருவாயில் 1.1% பங்களிக்கிறது.
1966 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட SIPRI நிறுவனத்தின் தலைமையகம் சுவீடனின் ஸ்டாக் ஹோமில் உள்ளது.
இது ஆயுத விற்பனை, இராணுவத் தயாரிப்புகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளின் அடிப்படையில் ஆண்டுதோறும் இந்தத் தரவரிசையை வெளியிடுகிறது.