2024 ஆம் ஆண்டிற்குள் அதிகரிக்க உள்ள காற்றாலை திட்டங்கள்
August 29 , 2022 1044 days 481 0
இந்தியாவில் புதிய காற்றாலை மின் நிலையங்கள் நிறுவப்படுகின்ற வருடாந்திர நிறுவல் வீதம் 2024 ஆம் ஆண்டிற்குள் உச்சத்தை எட்டும் என்றும் அதன் பிறகு அது குறையும் என்றும் கூறப்படுகிறது.
2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் புதிய திட்டங்கள் காற்று ஆற்றல்-சூரிய ஆற்றல் ஆகியவற்றின் கலப்பினங்களாக இருக்கும்.
இது உலகக் காற்றாற்றல் சபை (GWEC) மற்றும் MEC இன்டலிஜென்ஸ் (MEC+) ஆகியவற்றால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது 13.4 ஜிகாவாட் திறன் கொண்ட காற்றாலை ஆற்றல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இது சந்தையில் 2024 ஆம் ஆண்டு வரை நிறுவல்களுக்கான பணிகளைக் கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இந்தியாவில் 2022 ஆம் ஆண்டில் மேலும் 3.2 ஜிகாவாட் திறன்களை இதில் சேர்க்கும் விதமாக புதிய நிலையங்கள் நிறுவப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இது 2023 ஆம் ஆண்டில் 4.1 GW ஆகவும் 2024 ஆம் ஆண்டில் 4.6 GW ஆகவும் உயர உள்ளது.
அதன் பின் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 4 ஜிகாவாட் மற்றும் 3.5 ஜிகாவாட் என்ற அளவாக அது குறையும்.
2017 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் காற்றாலை மின் நிலைய நிறுவல்கள் குறைந்து வருகின்றன.
2021 ஆம் ஆண்டில் 1.45 GW திறன் கொண்ட காற்றாலை நிலையங்கள் மட்டுமே நிறுவப் பட்டன.