TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டில் உலகளாவிய எரிவாயு எரிப்பு உமிழ்வுகள்

August 5 , 2025 9 days 30 0
  • 2024 ஆம் ஆண்டில் எரிவாயு எரிப்பு ஆனது உலகளவில் 389 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடுக்கு சமமான (CO2e) உமிழ்வினை வெளியிட்டது.
  • எரிக்கப்படாத மீத்தேன் மொத்த உமிழ்வுகளில் 46 மில்லியன் டன் பங்களித்தது.
  • உலகளாவிய எரிப்பு அளவு 151 பில்லியன் கன மீட்டர் அளவினை எட்டியது, இது 2007 ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான அதிகபட்சமாகும்.
  • எண்ணெய் உற்பத்தியில் 3 சதவீதம் மட்டுமே அதிகரித்த போதிலும் நைஜீரியாவின் எரிவாயு எரிப்பு 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • நைஜீரியாவில் எரிப்புத் தீவிரம் சுமார் 8 சதவீதம் அதிகரித்து, இரண்டாவது ஆண்டாக அதிகரித்துள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய எரிப்புகளில் 76 சதவீதத்தினை முதல் ஒன்பது எரிப்பு நாடுகள் கொண்டிருந்தன.
  • உலகளவில் எரிப்பு ஆனது, சுமார் 162 பில்லியன் கன மீட்டர் என்ற ஆப்பிரிக்காவின் வருடாந்திர எரிவாயு நுகர்விற்கு கிட்டத்தட்டச் சமமாக இருந்தது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் Zero Routine Flaring (ZRF) எனப்படும் அதிகப்படியான இயற்கை எரிவாயுவின் வழக்கமான எரிப்பினை இடைநிறுத்துதல் என்ற முயற்சியின் இலக்கை அடைய தற்போது 40 சதவீத வருடாந்திரக் குறைப்பு தேவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்