2024 ஆம் ஆண்டில் உலகம் சுமார் 25,870 சதுர மைல்கள் (67,000 சதுர கிலோமீட்டர்) அளவிலான பிரதான மழைக்காடுகளை இழந்தது.
இது 2023 ஆம் ஆண்டில் இழந்த அளவை விட சுமார் இரு மடங்கு அதிகமாகும்.
கடந்த ஆண்டு, முதன்முறையாக, தீ விபத்துகள் ஆனது காடுகள் இழப்புக்கு மிகப் பெரிய காரணமாக இருந்தன.
காடுகள் இழப்பிற்கான இரண்டாவது பெரிய காரணம் பயிர்களை வளர்ப்பது மற்றும் விலங்குகளை வளர்ப்பது உள்ளிட்ட வேளாண் பயன்பாட்டிற்காக வேண்டி நிலத்தை அழிப்பதாகும்.
வேளாண்மைக்காக அழிக்கப் பட்ட நிலத்தின் அளவு கடந்த ஆண்டு 14% அதிகரித்து உள்ளது.
இது 10 ஆண்டுகளில் மிகப்பெரிய அதிகரிப்பு ஆகும்.
உலகின் மொத்தப் பிரதான காடுகளின் இழப்பில் 42% பிரேசிலில் பதிவாகி இருந்தது என்ற நிலையில் இதில் இரண்டாம் இடத்தில் பொலிவியா உள்ளது.