2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கான முத்திரைச் சின்னம்
August 14 , 2023 746 days 1147 0
தமிழக மாநில அரசின் உயர்இலட்சிய மிக்க உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கான 'முத்திரைச் சின்னத்தினை' தமிழக முதல்வர் அவர்கள் வெளியிட்டார்.
2024 ஆம் ஆண்டு ஜனவரி 07 மற்றும் 08 ஆகிய தேதிகளில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.
'த' என்ற தமிழ்ச் சொல்லினைக் குறிக்கும் வகையிலான இந்தச் சின்னமானது தாய் மொழியான தமிழ்ச் செம்மொழியை நன்குச் சித்தரிக்கும் வகையிலும், அனைத்துப் பரிமாணங்களிலும் தழைத்தோங்கும் தமிழக மாநிலத்தினை நன்குச் சித்தரிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
இந்த சின்னத்தின் நிறங்கள் மற்றும் அழகியல் மதிப்பீடானது எண்ணிம மாற்றம் மற்றும் தொழில்மயமாக்கல், ஒரு நகரமயமாக்கப்பட்டச் சமூகம் மற்றும் விரைவான தொழில்துறை வளர்ச்சி ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது.
2030 ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதாரம் என்ற உன்னத நிலையை அடையும் ஒரு இலக்கை நோக்கி மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழக மாநில அரசின் முயற்சிக்கு இந்தச் சந்திப்பு உதவும்.