2024 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் சிறந்த வர்த்தகப் பங்குதாரர்
May 18 , 2024 420 days 346 0
2023-24 ஆம் நிதியாண்டில் சுமார்118.4 பில்லியன் டாலர் மதிப்பிலான இருவழி வர்த்தகத்துடன் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்குத்தாரராக சீனா உருவெடுத்துள்ளது.
GTRI எனப்படும் பொருளாதார சிந்தனைக் குழுவின் தரவுகளின்படி அமெரிக்காவினை சீனா விஞ்சியது.
இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் ஆனது 2023-24 ஆம் ஆண்டில் 118.3 பில்லியன் டாலராக இருந்தது.
கடந்த நிதியாண்டில் சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 8.7 சதவீதம் அதிகரித்து 16.67 பில்லியன் டாலராக உள்ளது.
அந்த நாட்டுக்கான ஏற்றுமதியில் வளமான வளர்ச்சிக்குப் பங்களித்த முக்கியத் துறைகளில் இரும்புத் தாது, பருத்தி நூல்/இழைகள்/முழுத் தயாரிப்புகள், கைத்தறி, மசாலாப் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், நெகிழிப் பொருட்கள் மற்றும் லினோலியம் ஆகியவை அடங்கும்.
இதற்கிடையில், 2022-23 ஆம் ஆண்டில் 78.54 பில்லியன் டாலர்களாக இருந்த அமெரிக்காவிற்கான ஏற்றுமதியானது 2023-24 ஆம் ஆண்டில் 1.32 சதவீதம் குறைந்து 77.5 பில்லியன் டாலராக இருந்தது, அதே நேரத்தில் இறக்குமதிகள் சுமார் 20 சதவீதம் குறைந்து 40.8 பில்லியன் டாலராக இருந்தது.