2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பாலினச் சமத்துவம்
July 30 , 2024 341 days 391 0
2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பாலினச் சமத்துவத்தினைத் தொடர்ந்து, சரியாக 50 சதவீதம் ஆண் மற்றும் பெண் பங்கேற்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியானது ஒட்டு மொத்தமாக 48.8 சதவீத பெண் வீராங்கனைகள் கொண்டு நடந்தது.
தற்போது, 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பதிவான பங்கேற்பு விகிதத்துடன் ஒப்பிடச் செய்யும் போது, கலப்பு பாலினப் பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளின் எண்ணிக்கை 18 என்ற அளவில் இருந்து 22 ஆக அதிகரித்துள்ளது.
தடகளம், குத்துச்சண்டை மற்றும் சைக்கிள் பந்தயம் ஆகியவை 2024 ஆம் ஆண்டு பாரிசு ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக முழு பாலினச் சமத்துவத்தை எட்டி உயுள்ளன.
2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறும் 32 விளையாட்டுகளில் 28 போட்டிகளில் முழு பாலினச் சமத்துவம் பேணப்பட்டுள்ளது.