உலக வானிலை அமைப்பு ஆனது, 21வது வருடாந்திர பசுமை இல்ல வாயு உமிழ்வு அறிக்கையை வெளியிட்டது.
2024 ஆம் ஆண்டில் உலகளாவிய சராசரி வெப்பநிலையானது 1850–1900 ஆம் ஆண்டில் இருந்த அடிப்படை அளவை விட அதிகமாக 1.55 டிகிரி செல்சியஸை எட்டியது.
1957 ஆம் ஆண்டில் நவீனப் பதிவுகள் தொடங்கியதிலிருந்து மிக விரைவான வருடாந்திர CO₂ உயர்வு இதுவாகும்.
இந்தியாவில் நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறனில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை தற்போது புதைபடிவமற்ற மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன.
இந்தியா உலகளாவிய உமிழ்வுகளில் 7% பங்களிக்கிறது என்றாலும் உலக மக்கள் தொகையில் 18 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
ஆரம்பகட்ட வெப்பமடைதலின் சுற்றுக்கள் ஆனது சுற்றுச்சூழல் அமைப்புகளை மீள முடியாத மீள் எழுச்சி நிலைகளைக் கடந்து தள்ளக்கூடும் என்று இந்த அறிக்கை எச்சரிக்கிறது.
COP30 மாநாட்டிற்கு முன் அனைத்து நாடுகளும் உமிழ்வை விரைவாகக் குறைக்க வேண்டும் என்று WMO (உலக வானிலை அமைப்பு) வலியுறுத்தியது.
1.5 டிகிரி இலக்கை அடைய 2030 ஆம் ஆண்டில் 45 சதவீத CO₂ குறைப்பு தேவை என்று அறிவியலாளர்கள் மதிப்பிடுகின்றனர்.