மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, 2024-25 ஆம் ஆண்டில் இந்தியா 353.96 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.
இந்திய உணவுக் கழகம் (FCI) மற்றும் மாநில முகமைகள், மத்திய தானிய திரட்டல்களுக்கான 917.83 LMT அளவிலான பாதுகாக்கப்பட்ட மற்றும் CAP சேமிப்புத் திறனைக் கொண்டுள்ளன.
40.21 மில்லியன் MT கொள்ளளவு கொண்ட 8,815 குளிர்பதனக் கிடங்குகள் நாடு முழுவதும் வீணாகக் கூடிய பொருட்களைப் பாதுகாக்கின்றன.
முதன்மை வேளாண் கடன் சங்கங்களின் (PACS) பரவலாக்கப்பட்ட சேமிப்பு விரிவடைந்து வருகிறது என்பதோடு 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 5,937 புதிய PACS பதிவு செய்யப் பட்டதுடன், 73,492 மையங்கள் கணினிமயமாக்கப் பட்டன.