TNPSC Thervupettagam

2024-2025 ஆம் நிதியாண்டிற்கான இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு

June 4 , 2025 5 days 57 0
  • 2024–25 ஆம் நிதியாண்டில் இந்தியாவானது சுமார் 81.04 பில்லியன் அமெரிக்க டாலர் (தற்காலிக மதிப்பீடு) மதிப்புள்ள அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றுள்ளது.
  • இது முந்தைய ஆண்டில் பதிவான 71.28 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 14% அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது.
  • 2024–25 ஆம் நிதியாண்டில் மொத்த வரவில் 19% பங்குடன், சேவைத் துறையே அதிக அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்ற துறையாக உருவெடுத்தது.
  • இந்தத் துறையானது 2023–24 ஆம் நிதியாண்டில் பெற்ற 6.64 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 40.77% அதிகரித்து, 9.35 பில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெற்று உள்ளது.
  • அதைத் தொடர்ந்து கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் துறை ஆகியன 16% முதலீட்டினையும், வர்த்தகம் 8% முதலீட்டினையும் பெற்றது.
  • இந்திய மாநிலங்களில், மகாராஷ்டிரா 39% பங்குடன், அதிக அளவு FDI பங்கு வரவைப் பெற்றுள்ளது, அதனைத் தொடர்ந்து கர்நாடகா (13%) மற்றும் டெல்லி (12%) உள்ளது.
  • முதலீட்டிற்கான மூல ஆதார நாட்டின் அடிப்படையில், மொத்த FDI வரவில் சிங்கப்பூர் 30% பங்கினையும், அதைத் தொடர்ந்து மொரிஷியஸ் 17% மற்றும் அமெரிக்கா 11% பங்கினையும் அளித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்