2024-25 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பதிவான மின் தேவை
October 18 , 2024 264 days 289 0
2024-25 ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் தமிழ்நாட்டின் மின் தேவையானது 6.2% அதிகரித்து 68,967 மில்லியன் அலகுகளாக (MU) உள்ளது.
கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்த மின் தேவையானது 64,958 MU ஆக இருந்தது.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல்-செப்டம்பர் மாத காலத்தில், மாநிலத்தின் உச்சபட்ச மின் தேவையானது 20,784 மெகாவாட்டாக இருந்தது என்ற நிலையில் இது கடந்த ஆண்டில் இதன் ஒப்பிடக் கூடிய காலகட்டத்தில் 19,045 மெகாவாட்டாக இருந்தது.
இந்தியாவில் உள்ள மொத்தத் தொழிற்சாலைகளில், 15.66 சதவீதப் பங்குடன் (2,53,334) தமிழகம் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டின் கோடைப் பருவத்தில், மே 02 ஆம் தேதியன்று 20,830 மெகாவாட் என்ற எப்போதும் இல்லாத அளவினை எட்டிய மாநிலத்தின் மின் தேவையானது ஒரு புதிய சாதனை அளவினை எட்டியது.
ஏப்ரல் 30 ஆம் தேதியன்று தினசரி நுகர்வு அளவானது 454.32 MU என்ற புதிய உச்சத்தை எட்டியது.
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டின் மொத்த நிறுவப் பட்ட மின் உற்பத்தி திறன் 41,126.68 மெகாவாட் ஆகும்.