TNPSC Thervupettagam

2024-25 ஆம் ஆண்டில் இந்தியாவின் பண வரவில் அதிகரிப்பு

July 4 , 2025 14 hrs 0 min 25 0
  • 2024-25 ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் 135.46 பில்லியன் டாலர் பணத்தை தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பியுள்ளதை அடுத்து இந்தியாவின் பண வரவில் இதுவரை இல்லாத அளவிலான வரவு பதிவாகியுள்ளது என்பதோடு இது கடந்த ஆண்டை விட 14% அதிகமாகும்.
  • 2024 ஆம் ஆண்டில், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் சுமார் 129.4 பில்லியன் டாலரை இந்தியாவிற்கு அனுப்பினர் என்பதோடு இது அனைத்து நாடுகளை விட மிக அதிகமாகும்.
  • இந்தியாவானது பண வரவு சார்ந்த வருவாயில் மெக்ஸிகோ (68 பில்லியன் டாலர்) மற்றும் சீனா (48 பில்லியன் டாலர்) ஆகிய நாடுகளை விட முன்னணியில் உள்ளது.
  • 1990 ஆம் ஆண்டில் சுமார் 6.6 மில்லியனாக இருந்த வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின் எண்ணிக்கையானது 2024 ஆம் ஆண்டில் சுமார் 18.5 மில்லியனாக அதிகரித்தது.
  • புலம் பெயர்ந்த இந்தியர்களில்/இந்திய குடியேறிகளில் சுமார் பாதி பேர் வளைகுடா நாடுகளில் வசிக்கின்றனர்.
  • அமெரிக்க நாட்டின் வரைவு மசோதாவானது இந்தியாவினைச் சேர்ந்த தொழிற்துறை நிபுணர்களுக்கான பணம் அனுப்புதல் மீதான வரியை 5 சதவீதத்திலிருந்து 1% ஆகக் குறைத்து, இந்தியாவிற்கான பணப் பரிமாற்றங்களை எளிதாக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்