2024/25 ஆம் ஆண்டில் சென்னை IIT நிறுவனத்தின் காப்புரிமைகள்
April 29 , 2025 69 days 88 0
சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது, 2024-25 ஆம் ஆண்டில் 417 காப்புரிமைகளைத் தாக்கல் செய்துள்ளது என்ற ஒரு நிலையில் இதில் 298 இந்தியக் காப்புரிமைகளும், 119 சர்வதேச காப்புரிமைகளும் அடங்கும்.
இந்த நிறுவனம் ஆனது 39 வடிவமைப்புகள், ஆறு காப்புரிமைகள் மற்றும் ஒரு வர்த்தக முத்திரையைத் தாக்கல் செய்துள்ளது என்ற நிலையில் இதன் மூலம் மொத்த அறிவு சார் சொத்துத் தாக்கல்களின் எண்ணிக்கை 463 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்த நிறுவனம் ஆனது சுமார் 28 கோடி ரூபாய் மதிப்புள்ள 50க்கும் மேற்பட்ட உரிம ஒப்பந்தங்கள் மூலம் வளர்ந்து வரும் அதிகத் தாக்கங்களை ஏற்படுத்தும் தொழில்நுட்பங்களை உருவாக்கி பல தொழில்துறைக் கூட்டாளர்களுக்கு பரிமாற்றியுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்த நிறுவனத்தின் தொழில்நுட்பப் பரிமாற்ற அலுவலகம் (TTO) ஆனது உரிம வழங்கீட்டு வருவாயை இரட்டிப்பாக்கியுள்ளது மற்றும் உரிமம் பெற்ற அறிவுசார் சொத்துக்களின் எண்ணிக்கையை மூன்று மடங்காக உயர்த்தி உள்ளது.