2024/25 ஆம் ஆண்டில் பொதுத்துறை நிறுவனப் பங்குத் தொகை
July 25 , 2025 2 days 26 0
கடந்த ஐந்து ஆண்டுகளில், மத்திய அரசானது பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து பெற்ற பங்குத் தொகையை சற்றேறக்குறைய இரட்டிப்பாக்கி 74,000 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளது.
2020-21 ஆம் நிதியாண்டிலிருந்து அரசாங்கம் சேகரித்த மொத்தப் பங்குத் தொகையில் 42% ஆனது எரிபொருள் தொடர்பான ஐந்து பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப் பட்டது.
புதிய விதிகளின்படி, ஒவ்வொரு மத்திய பொதுத் துறை நிறுவனமும் அதன் வரிக்குப் பிந்தைய லாபத்தில் (PAT) குறைந்த பட்சம் 30% அல்லது அதன் நிகர மதிப்பில் 4% இவற்றுள் எது அதிகமாக உள்ளதோ அதைச் செலுத்த வேண்டும்.
2022-23 மற்றும் 2024-25 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் IOC மற்றும் BPCL அரசாங்கத்திற்கு அளித்த கூட்டுப் பங்குத்தொகை சுமார் 255% அதிகரித்து 2,435 கோடி ரூபாயிலிருந்து 8,653 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.