2024/25 ஆம் ஆண்டு சுவச் சர்வேக்சன் கணக்கெடுப்பில் தமிழ்நாடு
July 22 , 2025 5 days 62 0
3 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான மக்கள் தொகை கொண்ட 95 நகரங்களின் கணக்கெடுப்பில் திருச்சி மாநகராட்சி 49வது இடத்தைப் பிடித்துள்ளது.
2023-24 ஆம் ஆண்டிற்கான கணக்கெடுப்பில், நாடு முழுவதும் உள்ள 446 முக்கிய நகரங்களில் திருச்சி மாநகராட்சி 112வது இடத்தைப் பிடித்தது.
திருச்சியானது இந்தப் பிரிவில் மாநில அளவில் முதலிடத்திலும் மற்றும் ஒட்டு மொத்த மாநிலத் தரவரிசையில் ஒன்பதாவது இடத்தையும் பிடித்துள்ளது.
திருச்சி மாநகராட்சியை ODF++ (திறந்தவெளி கழிப்பிடமற்ற ++) சாதனை கொண்ட மாவட்டமாக அமைச்சகம் சான்றளித்துள்ளது.
கோயம்புத்தூர் நகரம் இதில் 28வது இடத்தைப் பிடித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் 35வது இடத்தில் இருந்த அந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க ஒரு முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
மேலும் இந்த நகரம் ஆனது தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் தமிழ்நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அதன் முந்தைய ODF நிலையிலிருந்து மேம்படுத்தப் பட்டு ODF++ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழ், திறந்தவெளியில் மலம் கழித்தல் நடவடிக்கை இல்லை என்பதையும், தூய்மையான மற்றும் செயல்பாட்டில் உள்ள பொது கழிப்பறைகளை பேணுவதையும் உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், கழிவுநீர் வலையமைப்புகளுடன் இணைக்கப் படாத பகுதிகள் உட்பட, மலக் கழிவுகளை மிகப் பாதுகாப்பான முறையில் சேகரித்தல், சுத்திகரித்தல் மற்றும் அகற்றுவதற்கான திறன் மிக்க அமைப்புகளையும் கொண்டு உள்ளது என்பதைக் குறிக்கிறது.
10 லட்சத்திற்கும் மிக அதிகமான மக்கள்தொகை கொண்ட நகர்ப்புறத்தின் உள்ளாட்சி அமைப்புகளில் (ULBs) இடம் பெற்றுள்ள 40 இடங்களில் சென்னை 38வது இடத்தையும், தமிழ்நாட்டில் ஒட்டு மொத்தமாக 104வது இடத்தையும் பிடித்தது.
இந்தூர் 7 நட்சத்திரத் தரத்தில் குப்பைகளற்ற நகரம் (GFC) என்ற தரத்தினைப் பெற்றது, என்ற நிலையில் சென்னை எந்த தரத்தினையும் பெறவில்லை.
கோயம்புத்தூர் 28வது இடத்தைப் பிடித்தது (10 லட்சத்திற்கும் அதிகமான ஒரு மக்கள் தொகை பிரிவு)
மதுரை 40வது இடத்தைப் பிடித்தது (இப்பட்டியலில் கடைசி இடம்)
திருச்சி 49வது இடத்தைப் பிடித்தது (3 லட்சம் முதல் 10 லட்சம் மக்கள் தொகைப் பிரிவு)
2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சுவச் சர்வேக்சன், பல்வேறு சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை அளவுருக்கள் குறித்து நகர்ப்புறத்தின் உள்ளாட்சி அமைப்புகளை மதிப்பிடுவதற்காக ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இது மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின் படி நடத்தப்படுகிறது.