2024-25 ஆம் ஆண்டிற்கான எத்தனால் கொள்முதல் விலையில் திருத்தம்
February 2 , 2025 222 days 260 0
எத்தனால் விநியோக ஆண்டிற்கான (ESY- 2024-25) பொதுத்துறை எண்ணெய் சந்தைப் படுத்துதல் நிறுவனங்களுக்கான (OMCs) எத்தனால் கொள்முதல் விலைகளை திருத்தி அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய அரசின் எத்தனால் கலப்பு கலந்த பெட்ரோல் (EBP) திட்டத்தின் கீழ், இந்தக் காலம் ஆனது 2024 ஆம் ஆண்டு நவம்பர் 01 முதல் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
C ரக கனசர்க்கரைக் கழிவுகளிலிருந்து (CHM) பெறப்பட்ட எத்தனாலின் தொழிற்சாலை கொள்முதல் விலையானது ஒரு லிட்டருக்கு சுமார் 56.58 ரூபாயிலிருந்து 57.97 ரூபாயாக அதிகரிக்கப் பட்டுள்ளது. இது 3% உயர்வைக் குறிக்கிறது.
பொதுத்துறை OMC நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் எத்தனால் கலப்பு ஆனது 2013-14 ஆம் எத்தனால் விநியோக ஆண்டில் சுமார் 38 கோடி லிட்டரிலிருந்து 2023-24 ஆம் எத்தனால் விநியோக ஆண்டில் 707 கோடி லிட்டராக உயர்ந்தது.