TNPSC Thervupettagam

2024/25 ஆம் ஆண்டில் தனி நபர் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி

July 27 , 2025 16 days 75 0
  • தனிநபர் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு மாநிலமானது நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமாக 9.69 சதவீத வளர்ச்சி பதிவாகி உள்ளது.
  • 2024–25 ஆம் ஆண்டிற்கான கர்நாடகாவின் தனிநபர் வருமானம் அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் மிக உயர்ந்ததாகும்.
  • இது 2 லட்சம் ரூபாய் வரம்பைத் தாண்டியது.
  • கடந்த பத்தாண்டுகளில் கர்நாடகாவின் வருமானம் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்து, பெரும்பாலான முக்கிய மாநிலங்களை விட சிறப்பான செயல்திறனைக் கொண்டுள்ளது.
  • தேசியப் புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தற்காலிக மதிப்பீடுகளின் படி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
  • தேசியப் புள்ளி விவர அலுவலகம் மத்தியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் உள்ளது.
  • 2024-25 ஆம் ஆண்டிற்கான நிலையான அல்லது அடிப்படை விலையில் தனி நபர் நிகர தேசிய வருமானம் 1,14,710 ஆக இருந்தது.
  • இது ஒரு தசாப்தத்திற்கு முன்பு 72,805 ரூபாயாக இருந்த மதிப்பில் இது 57.6 சதவீத வளர்ச்சியைக் குறிக்கிறது.
  • இந்த காலக் கட்டத்தில் தமிழ்நாட்டிற்கான தனி நபர் நிகர தேசிய வருமானம் 1,96,309 ரூபாயாக இருந்தது.
  • ஒரு தசாப்த கால வளர்ச்சியில், கர்நாடகா 93.6% அதிகரிப்புடன் நாட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • இது 96.7% அதிகரிப்பைப் பதிவு செய்த ஒடிசாவிற்குச் சற்றுப் பின்னால் உள்ளது.
  • 2023-24 ஆம் ஆண்டில், மிசோரம் 125.4% அளவு வளர்ச்சியையும், அதைத் தொடர்ந்து குஜராத் (90.7%), கோவா (89.9%), கர்நாடகா (88.5%), தெலுங்கானா (84.3%) மற்றும் ஒடிசா (83.4%) ஆகிய மாநிலங்களும் அதிக வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்தன.
  • பத்தாண்டுகளில் பஞ்சாப் 41.3% வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்தது என்ற நிலையில், உத்தரக்காண்ட் 33.5% அளவில் வளர்ச்சியடைந்துள்ளது மற்றும் புதுச்சேரியானது அனைத்து பதிவிடப்பட்ட மாநிலங்களிலும் மிகக் குறைவாக 32.8% அளவினை மட்டுமே பதிவு செய்துள்ளது.
  • பொருளாதார மேம்பாட்டின் மாறுபட்ட நிலைகள், துறைசார் அமைப்பு, கட்டமைப்பு சார்ந்த கட்டுப்பாடுகள் மற்றும் நிர்வாகத் தரம் ஆகியவை சீரற்ற வளர்ச்சிக்குக் காரணம் என்று அமைச்சகம் கூறியுள்ளது.
  • இருப்பினும், 2024-25 ஆம் ஆண்டிற்கான முழுமையானத் தரவுகள் இன்னும் பல மாநிலங்கள் மற்றும் ஒன்றியப்  பிரதேசங்களிடம் இருந்து கிடைக்கவில்லை.
  • அருணாச்சலப் பிரதேசம், கோவா, குஜராத், ஜார்க்கண்ட், கேரளா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, உத்தரப் பிரதேசம், அந்தமான் & நிக்கோபார் தீவுகள், சண்டிகர், டெல்லி மற்றும் லடாக் உள்ளிட்டவை அரசாங்கத்தின் பதிலில் 'தரவுகள் கிடைக்கப் பெறவில்லை' எனக் குறிக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்