2024-25 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாய்
May 21 , 2025 14 hrs 0 min 41 0
2024-25 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாய் 7.6% அதிகரித்துள்ளது.
2024-25 ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாய் சுமார் 1,80,225.53 கோடி ரூபாயாக இருந்தது.
இது 2023-24 ஆம் நிதியாண்டில் பதிவான 1,67,105.18 கோடி ரூபாயிலிருந்து சுமார் 7.6% அதிகமாகும்.
திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் (SOTR) ஆனது, சுமார் 1,92,752.43 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
2025-26 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டு மதிப்பீடுகளில் இது சுமார் 1,95,173 கோடி ரூபாய என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மொத்த வருவாய் வரவுகளில் SOTR 75.3% பங்கினைக் கொண்டுள்ளது.
அதன் கூறுகளில், 2023-24 ஆம் ஆண்டில் 61,960.29 கோடி ரூபாயாக இருந்த மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST) ஆனது 2024-25 ஆம் ஆண்டில் சுமார் 70,886.65 கோடி ரூபாயாக 14.4% அதிகரித்துள்ளது.
2023-24 ஆம் ஆண்டில் 19,013.36 கோடி ரூபாயாக இருந்த மாநிலத்தின் பத்திரத்தாள் / முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டண வருவாய் ஆனது, 2024-25 ஆம் ஆண்டில் 21,878.27 கோடி ரூபாயாக சுமார் 15% உயர்ந்துள்ளது.
2023-24 ஆம் ஆண்டில் 255.87 கோடி ரூபாயாக இருந்த நில வருவாயானது, 2024-25 ஆம் ஆண்டில் 277.72 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
2023-24 ஆம் ஆண்டில் சுமார் 60,026.96 கோடி ரூபாயாக இருந்த விற்பனை, வர்த்தகம் போன்றவற்றின் மீதான வரிகளிலிருந்து (பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானங்கள் மீதான மதிப்புக் கூட்டல் வரி உட்பட) பெறப்பட்ட வருவாய் ஆனது 2024-25 ஆம் ஆண்டில் 62,335.08 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
2023-24 ஆம் ஆண்டில் 10,774.29 கோடி ரூபாயாக இருந்த மாநிலக் கலால் வரிகள் (மது வருவாயைப் பிரதிபலிக்கும்) ஆனது 2024-25 ஆம் ஆண்டில் 11,055.41 கோடி ரூபாயாக அதிகரித்தன.
2023-24 ஆம் ஆண்டில் சுமார் 15,074.41 கோடி ரூபாயாக இருந்த, பிற வரிகள் மற்றும் கட்டணங்களிலிருந்து கிடைக்கும் வருவாய் ஆனது 2024-25 ஆம் ஆண்டில் 13,792.40 கோடி ரூபாயாகக் குறைந்தது.
தமிழ்நாட்டின் மொத்த வருவாய் வரவுகளில் மீதமுள்ளவையானது வரி சாராத வருவாய், மத்திய அரசின் வரிகளில் உள்ள மாநில அரசின் பங்கு மற்றும் மத்திய அரசின் மானியங்கள் ஆகியவற்றிலிருந்து வருகின்றன.
மத்திய வரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான மாநில அரசின் பங்கு 52,491.88 கோடி ரூபாயாக இருந்தது.
இது 2024-25 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் கணிக்கப்பட்டவற்றுடன் ஒத்துப் போகிறது.
2024-25 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் மானிய உதவியானது 16,509.38 கோடி ரூபாயாக இருந்தது என்ற நிலையில் இது 2024-25 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 20,538.40 கோடி ரூபாயாக இருந்தது.
2024-25 ஆம் ஆண்டில் 31,388.70 கோடி ரூபாயாக இருந்த வரி சாராத வருவாய் ஆனது, திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 28,124 கோடி ரூபாயாக இருந்தது.
இந்தக் கூறுகளை உள்ளடக்கி, CAG மதிப்பீட்டின் முதல் நிலை புள்ளி விவரங்களின் படி, 2024-25 ஆம் ஆண்டில் மாநிலத்தின் மொத்த வருவாய் வரவுகள் ஆனது 2,80,615.49 கோடி ரூபாயாக இருந்தன.
2024-25 ஆம் ஆண்டிற்கான மொத்த வருவாய் வரவுகள் மதிப்பீடு ஆனது 2,93,906.41 கோடி ரூபாயாக திருத்தப்பட்டது.