தற்காலிகத் தரவுகளின்படி, 2024-25 ஆம் நிதியாண்டில் இரும்புத் தாது உற்பத்தியானது 289 மில்லியன் மெட்ரிக் டன் (MMT) ஆக உயர்ந்துள்ளது.
இது 4.3% வளர்ச்சியுடன் 2023-24 ஆம் நிதியாண்டில் பதிவான சுமார் 277 MMT உற்பத்தி அளவினை விஞ்சியுள்ளது.
இதே போல், மாங்கனீசு தாது உற்பத்தியும் 2023-24 ஆம் நிதியாண்டில் பதிவான 3.4 MMT உற்பத்திச் சாதனையை விஞ்சியுள்ளது.
இது 2024-25 ஆம் நிதியாண்டில் 11.8% அதிகரித்து 3.8 MMT ஆக உயர்ந்துள்ளது.
2023-24 ஆம் ஆண்டில் நிதியாண்டில் 24 MMT ஆக இருந்த பாக்சைட் உற்பத்தி 2024-25 ஆம் நிதியாண்டில் 2.9% அதிகரித்து 24.7 MMT ஆக உயர்ந்துள்ளது.
அதே காலக் கட்டத்தில், காரீயம் தாது உற்பத்தியானது 3.1% வளர்ச்சியுடன் 381 ஆயிரம் டன்களிலிருந்து (THT) 393 THT ஆக உயர்ந்து.
இங்கு இரும்பு அல்லாத உலோகத் துறையில், 2024-25 ஆம் நிதியாண்டில் முதன்மை அலுமினிய உற்பத்தியானது 2023-24 நிதியாண்டின் உற்பத்தி அளவினை விஞ்சி உள்ளது.
2023-24 ஆம் நிதியாண்டில் 41.6 லட்சம் (LT) டன்னாக இருந்த முதன்மை அலுமினிய உற்பத்தியானது, 2024-25 ஆம் நிதியாண்டில் 42 LT ஆக அதிகரித்துள்ளது.
சுத்திகரிக்கப் பட்ட தாமிர உற்பத்தியில் 12.6% என்ற ஒரு வலுவான வளர்ச்சியானது பதிவானது என்ற நிலையில் 2023-24 ஆம் நிதியாண்டில் 5.09 லட்சம் டன்னாக இருந்த இது 2024-25 ஆம் நிதியாண்டில் 5.73 LT ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவானத்து 2வது பெரிய அலுமினிய உற்பத்தியாளராக உள்ளது என்பதோடு சுத்திகரிக்கப் பட்ட தாமிர உற்பத்தியில் உலகின் 10 முன்னணி உற்பத்தியாளர்களில் ஒன்றாகவும் உலகின் 4வது பெரிய இரும்புத் தாது உற்பத்தி நாடாகவும் தற்போது உள்ளது.