பாதுகாப்புத் துறை ஏற்றுமதிகள் 2024-25 ஆம் நிதியாண்டில் சாதனை அளவான 23,622 கோடி ரூபாயை (~2.76 பில்லியன் டாலர்) எட்டியுள்ளன. இது 2023-24 ஆம் நிதியாண்டில் பதிவான 21,083 கோடி ரூபாயிலிருந்து 12.04% அதிகரிப்பினைக் குறிக்கிறது.
இது 2013-14 ஆம் நிதியாண்டில் பதிவான 686 கோடி ரூபாயிலிருந்து 34 மடங்கு அதிகரிப்பைக் குறிக்கிறது.
சுமார் 80 நாடுகளுக்கு பாதுகாப்புத் துறை பொருட்களை ஏற்றுமதி செய்கின்ற இந்தியா 2029 ஆம் ஆண்டிற்குள் 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதியை இலக்காகக் கொண்டுள்ளது.
2024-25 ஆம் நிதியாண்டில் ஏற்றுமதியில் தனியார் துறை 15,233 கோடி ரூபாய் பங்களித்தது மற்றும் அரசின் பாதுகாப்புத் துறை நிறுவனங்கள் 8,389 கோடி ரூபாய் பங்களித்தன.
அரசு பாதுகாப்புத் துறை உற்பத்தி நிறுவனங்களின் ஏற்றுமதி முந்தைய ஆண்டை விட 42.85% அதிகரித்துள்ளது.
2024-25 ஆம் நிதியாண்டில் 1,762 ஏற்றுமதி அங்கீகாரங்கள் வழங்கப்பட்டன, இது 1,507 ஆக இருந்த முந்தைய ஆண்டை விட 16.92% அதிகமாகும்.
2024-25 ஆம் நிதியாண்டில் பாதுகாப்புத் துறை ஏற்றுமதியாளர்கள் 17.4% அதிகரித்துள்ளனர்.