TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டிற்கான ISSAR

June 2 , 2025 11 days 53 0
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்திய விண்வெளிச் சூழ்நிலை மதிப்பீட்டு அறிக்கையை (ISSAR) இஸ்ரோ வெளியிட்டது.
  • விண்வெளிச் சூழ்நிலை விழிப்புணர்வு (SSA) செயல்பாடுகளில் விண்வெளிச் சூழல் பற்றிய அறிவு, அச்சுறுத்தல்களை மதிப்பிடுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
  • 2024 ஆம் ஆண்டில் இஸ்ரோ 10 மோதல் தவிர்ப்பு முயற்சிகளை (CAM) வெற்றிகரமாக மேற்கொண்டது.
  • விண்வெளியில் உள்ள பிற பொருட்களுடன் அது மோதுவதிலிருந்து அதன் செயற்கைக் கோள்களைப் பாதுகாப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில், உலகளவில் 261 ஏவுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, 254 வெற்றிகரமானப் பயணங்களின் விளைவாக சுமார் 2578 செயல்பாட்டுச் செயற்கைக் கோள்கள் குழுவில் சேர்க்கப்பட்டன.
  • 2024 ஆம் ஆண்டின் இறுதி வரை, இந்தியா 136 விண்கலங்களை விண்ணில் ஏவியது என்ற ஒரு நிலையில் இதில் 22 செயல்பாட்டுச் செயற்கைக்கோள்கள் புவி தாழ்மட்டச் சுற்றுப் பாதையில் (LEO) மற்றும் 31 புவி ஒத்திசைவுச் சுற்றுப்பாதையில் (GEO) உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்