TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டிற்குள் அதிகரிக்க உள்ள காற்றாலை திட்டங்கள்

August 29 , 2022 1042 days 480 0
  • இந்தியாவில் புதிய காற்றாலை மின் நிலையங்கள் நிறுவப்படுகின்ற வருடாந்திர நிறுவல் வீதம் 2024 ஆம் ஆண்டிற்குள் உச்சத்தை எட்டும் என்றும் அதன் பிறகு அது குறையும் என்றும் கூறப்படுகிறது.
  • 2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் புதிய திட்டங்கள் காற்று ஆற்றல்-சூரிய ஆற்றல் ஆகியவற்றின் கலப்பினங்களாக இருக்கும்.
  • இது உலகக் காற்றாற்றல் சபை (GWEC) மற்றும் MEC இன்டலிஜென்ஸ் (MEC+) ஆகியவற்றால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் தற்போது 13.4 ஜிகாவாட் திறன் கொண்ட காற்றாலை ஆற்றல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
  • இது சந்தையில் 2024 ஆம் ஆண்டு வரை நிறுவல்களுக்கான பணிகளைக் கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • இந்தியாவில் 2022 ஆம் ஆண்டில் மேலும் 3.2 ஜிகாவாட் திறன்களை இதில் சேர்க்கும் விதமாக புதிய நிலையங்கள் நிறுவப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • இது 2023 ஆம் ஆண்டில் 4.1 GW ஆகவும் 2024 ஆம் ஆண்டில் 4.6 GW ஆகவும் உயர உள்ளது.
  • அதன் பின் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 4 ஜிகாவாட் மற்றும் 3.5 ஜிகாவாட் என்ற அளவாக அது குறையும்.
  • 2017 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் காற்றாலை மின் நிலைய நிறுவல்கள் குறைந்து வருகின்றன.
  • 2021 ஆம் ஆண்டில் 1.45 GW திறன் கொண்ட காற்றாலை நிலையங்கள் மட்டுமே நிறுவப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்