2024 ஆம் ஆண்டில் இந்திய இரயில்வே நிர்வாகத்தின் நிலை
December 5 , 2024 233 days 228 0
இந்திய இரயில்வே நிர்வாகமானது, அதன் மொத்த அகலப்பாதை வலையமைப்பில் தோராயமாக 97 சதவீத மின்மயமாக்கலை நிறைவு செய்துள்ளது.
2014-15 ஆம் ஆண்டு முதல் அகலப்பாதை வலையமைப்பில் சுமார் 45,200 கிலோ மீட்டர்கள் அளவிலான வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.
இந்த மின்மயமாக்கல் நடவடிக்கையின் வேகம், 2004-14 ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு தோராயமாக 1.42 கிலோ மீட்டராக இருந்த நிலையில் இது 2023-24 ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு சுமார் 19.7 கிலோ மீட்டராக இருந்தது.
மிகச் சமீபத்தில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் இந்தியாவின் முதல் இரயிலை இந்திய இரயில்வே அறிமுகப்படுத்தியதோடு விரைவில் ஹரியானாவின் ஜிந்த் மற்றும் சோனிபட் ஆகிய இரு இரயில் நிலையங்களுக்கு இடையே இந்த இரயிலின் சோதனை ஓட்டம் நடத்தப் படும்.