2024 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கியின் தங்க கொள்முதல்
March 21 , 2024 565 days 525 0
2024 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் இந்திய ரிசர்வ் வங்கியின் நிகர தங்க கொள்முதல் (13.4 டன்) ஆனது, ஏற்கனவே அதன் 2023 ஆண்டிற்கான நிகர கொள்முதல் அளவை (16.2 டன்) விட 80% அதிகமாக உள்ளது.
இது 2015 ஆண்டிற்குப் பிறகு, இந்தக் காலக் கட்டத்திற்கான மிகப்பெரிய கொள்முதல் ஆகும்.
தங்கத்தைச் சீரான நிலையில் சேமித்து வரும் பல மத்திய வங்கிகளில் இந்திய ரிசர்வ் வங்கியும் ஒன்று ஆகும்.
அதன் வருடாந்திர நிகர தங்க கொள்முதல் சராசரியாக 42 டன் (2018 முதல் 2023 வரை) ஆகும்.