2024 ஆம் ஆண்டில் இந்தியா சுமார் 18,200 ஹெக்டேர் பரப்பிலான பிரதானக் காடுகளை இழந்துள்ளதோடு இது 2023 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட சுமார் 17,700 ஹெக்டேர் என்ற அளவில்ருந்து சற்று அதிகமாகும்.
2002 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட ஒரு காலத்தில், நாடு முழுவதும் மொத்தமாக சுமார் 3,48,000 ஹெக்டேர் பரப்பிலான ஈரப்பதமிக்க பிரதானக் காடுகள் இழக்கப் பட்டுள்ளன.
இது இந்தியாவின் மொத்த ஈரப்பதம் மிக்க பகுதிகளின் பிரதானக் காடுகளில் சுமார் 5.4% ஆகும்.
இது அதே காலக் கட்டத்தில் பதிவான நாட்டின் மொத்த மரப்பரப்பு இழப்பில் சுமார் 15% ஆகும்.
2001 ஆம் ஆண்டிலிருந்து, இந்தியா தோராயமாக 2.31 மில்லியன் ஹெக்டேர் பரப்பில் அமைந்த மரப் பரவலை இழந்துள்ளது என்பதோடு இது 7.1% சரிவைப் பிரதிபலிக்கிறது.
இந்த இழப்பு ஆனது சுமார் 1.29 ஜிகா டன் கார்பன் டை ஆக்சைடுக்குச் சமமான உமிழ்வை உருவாக்கியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில், 2001 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், 3,40,000 ஹெக்டேர் பரப்பிலான மரப் பரவல் இழப்பு பதிவாகியுள்ளது.
2001 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் காட்டுத்தீ காரணமாக 8,330 ஹெக்டேர் பரப்பிலான மரப் பரவல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து காரணமாக மிக அதிக அளவிலான வன இழப்பு ஏற்பட்ட ஆண்டு 2008 ஆம் ஆண்டாகும்.