2024 ஆம் ஆண்டில் உலகளாவிய எரிவாயு எரிப்பு உமிழ்வுகள்
August 5 , 2025 17 days 48 0
2024 ஆம் ஆண்டில் எரிவாயு எரிப்பு ஆனது உலகளவில் 389 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடுக்கு சமமான (CO2e) உமிழ்வினை வெளியிட்டது.
எரிக்கப்படாத மீத்தேன் மொத்த உமிழ்வுகளில் 46 மில்லியன் டன் பங்களித்தது.
உலகளாவிய எரிப்பு அளவு 151 பில்லியன் கன மீட்டர் அளவினை எட்டியது, இது 2007 ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான அதிகபட்சமாகும்.
எண்ணெய் உற்பத்தியில் 3 சதவீதம் மட்டுமே அதிகரித்த போதிலும் நைஜீரியாவின் எரிவாயு எரிப்பு 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
நைஜீரியாவில் எரிப்புத் தீவிரம் சுமார் 8 சதவீதம் அதிகரித்து, இரண்டாவது ஆண்டாக அதிகரித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் உலகளாவிய எரிப்புகளில் 76 சதவீதத்தினை முதல் ஒன்பது எரிப்பு நாடுகள் கொண்டிருந்தன.
உலகளவில் எரிப்பு ஆனது, சுமார் 162 பில்லியன் கன மீட்டர் என்ற ஆப்பிரிக்காவின் வருடாந்திர எரிவாயு நுகர்விற்கு கிட்டத்தட்டச் சமமாக இருந்தது.
2030 ஆம் ஆண்டிற்குள் Zero Routine Flaring (ZRF) எனப்படும் அதிகப்படியான இயற்கை எரிவாயுவின் வழக்கமான எரிப்பினை இடைநிறுத்துதல் என்ற முயற்சியின் இலக்கை அடைய தற்போது 40 சதவீத வருடாந்திரக் குறைப்பு தேவையாகும்.